காட்டு யானை தாக்கி பெண் அதிகாரி படுகாயம்

0
83

துடியலூர் அருகே சி.ஆர்.பி.எப். மைதானத்தில் காட்டு யானை தாக்கியதில் பெண் அதிகாரி படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

பெண் அதிகாரி

கோவையை அடுத்த துடியலூரை அருகே கதிர் நாயக்கன்பாளை யம் அடர்ந்த வனப்பகுதியை உள்ளடக்கியது. இங்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி பள்ளி (சி.ஆர்.பி.எப்.) உள்ளது. இந்த பயிற்சி பள்ளியில் நெல்லையை சேர்ந்த ராதிகா மோகன் (வயது 56) என்பவர் ஐ.ஜி.யின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

நேற்றுமுன்தினம் இரவு அவர் வேலையை முடித்து விட்டு தனது சக பெண் அதிகாரியுடன் வளாகத்தில் உள்ள வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வளாகத்தில் உள்ள உடைந்த மதில் சுவர் வழியாக காட்டு யானை ஒன்று உள்ளே புகுந்தது.

காட்டு யானை தாக்கியது

அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராதிகா மோகன் உள்பட 2 பேரும் தப்பி ஓடத்தொடங்கினர். உடனே அந்த யானையும் அவர்களை துரத்தி சென்றது. இதில், யானை லேசாக தாக்கியதில் ராதிகா கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். மேலும் அவர்க ளின் கூச்சல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் விரைந்து வந்தனர்.

அவர்கள், படுகாயம் அடைந்த ராதிகா மோகனை மீட்டு வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்த னர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக துடியலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதை அறிந்த வனத்துறையினர் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி மையத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து காட்டு யானை யை அந்த வளாகத்தில் இருந்து வெளியே விரட்டினர்.

தோட்டத்தில் புகுந்தது

இந்த நிலையில் கதிர்நாயக்கன்பாளையம் லட்சுமிநகர் பகுதியில் ஒரு தோட்டத்துக்குள் காட்டு யானை புகுந்தது. இதை அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்றுயை வனப்பகுதிக்குள் விரட்டி னர்.

சி.ஆர்.பி.எப். மைதானத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை லட்சுமி நகரில் தோட்டத்துக்குள் புகுந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே காட்டு யானை குடியிருப்பு பகுதிக் குள் வராமல் தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.