கோவை மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் (காட்சியா) 2025–26ம் ஆண்டுக்கான, புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.
அவிநாசி ரோடு, சிட்ரா ஆடிட்டோரியத்தில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கர்ண பூபதி, புதிய நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதில், தலைவராக செவ்வேள், துணைத் தலைவராக ராமலிங்கம், செயலாளராக பிரேம் குமார் பாபு, பொருளாளராக ரவி ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.
புதிய தலைவர் செவ்வேள், வரும் ஆண்டிற்கான கட்டுமானத் தொழில் டைரக்டரி 2025 திட்டத்தினை அறிமுகம் செய்து வைத்தார். செயலாளர் பிரேம் குமார் பாபு வரும் ஆண்டிற்கான செயல்திட்டங்களை கூறினார்.
இக்கூட்டத்தில், சங்க தலைவர் விஜயகுமார் மற்றும் புதிய துணைச் செயலாளர் மணிகண்டன், துணைப் பொருளாளர் கவிராஜ், அலுவலக நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன் உள்ளிட்ட ஏராளமான பொறியாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.