காகித பொருட்கள் தயாரிக்க பயிற்சி

0
13

கோவை; வேளாண் பல்கலை, உணவு பதன் செய் பொறியியல் துறையில், காகித அடிப்படையிலான பொருட்கள் உற்பத்தி குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது

இப்பயிற்சியில், வீணாகும் பொருட்கள் மற்றும் வளங்களில் இருந்து பொருளாதார நன்மைகளை உருவாக்குவது, மறு சுழற்சி செய்வது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும், காகிதம் துண்டாக்கும் இயந்திரம், காகித கூழ் தயாரிக்கும் இயந்திரம், அட்டை தயாரிக்கும் இயந்திரம், அட்டை நேர்த்தி செய்யும் இயந்திரம், அச்சு இயந்திரம் உள்ளிட்ட இயந்திரங்கள் வாயிலாக அலுவலக கோப்பு தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியில் பங்கேற்றவர்கள், மக்கும் பேக்கேஜிங் பொருட்கள் உற்பத்தி ஆலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது. பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்பட்டது.