களை விஞ்ஞானிக்கு வேளாண் பல்கலை முனைவர் விருது

0
95

கோவை, டிச. 9: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக உழவியல் பேராசிரியர் முரளி அர்த்தநாரிக்கு இந்திய களை அறிவியல் சங்கத்தின் முன்னவர் விருது வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடந்த தேசிய களை அறிவியல் மாநாட்டில் வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது முரளி அர்த்தநாரியின் களை மேலாண்மைப் பற்றிய ஆராய்ச்சிக்காவும், பயிர்களில் களை மேலாண்மை தொழில்நுட்பங்கள் உருவாக்கியதற்காகவும் மற்றும் 79 களை மேலாண்மை பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பித்தற்காவும் வழங்கப்பட்டது. இவ்விருதை ராணி லக்சுமிபாய் மத்திய பல்கலைக்கழக வேந்தர் பஞ்சாப்சிங் மற்றும் புதுதில்லி இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழக துணை பொது இயக்குநர் சௌத்திர் இணைந்து வழங்கினர். இதில், ஜபல்பூர் இந்திய களை அறிவியல் சங்க இயக்குநர் மற்றும் தலைவர் மிஸ்ரா, பன்னாட்டு களை அறிவியல் சங்க தலைவர் சமுந்தர் சிங், வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழக வேளாண் புல முதல்வர் சிங் உள்பட பலர் பங்கேற்றனர்.