பொள்ளாச்சியில் அரசு பஸ்சில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போக்குவரத்து கழக ஊழியர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
மாணவிக்கு பாலியல் தொல்லை
பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தினமும் வீட்டில் இருந்து கல்லூரிக்கு பஸ்சில் சென்று திரும்பி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் வழக்கம் போல் அரசு பஸ்சில் கோட்டூரில் இருந்து பொள்ளாச்சிக்கு வந்து கொண்டிருந்தார்.
சோமந்துறைசித்தூர் ஆஞ்சநேயர் கோவில் அருகில் வந்த போது, அந்த மாணவி அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்புற இருக்கையில் இருந்த நபர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் பஸ்சை விட்டு இறங்கி கல்லூரிக்கு செல்லாமல் நேராக அந்த மாணவி பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். மேலும் கோட்டூரில் இருந்து தினமும் பஸ்சில் அந்த நபர் வருவதாக மாணவி போலீசாரிடம் தெரிவித்தார்.