கல்லூரி மாணவர்களிடையே கோஷ்டி மோதல்

0
96

கோவை நவ இந்தியா பகுதியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 2 மற்றும் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று கல்லூரியை விட்டு வெளியே வந்த மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டதுடன், கத்தியால் குத்திக் கொண்டனர்.

இதில் இரு தரப்பை சேர்ந்த 3 மாணவர்கள் காயம் அடைந்தனர். இது குறித்து பீளமேடு போலீசார் இரு தரப்பை சேர்ந்த 15 மாணவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.‌ விசாரணையில் போதை மாத்திரை விற்பனை தொடர்பாக மோதல் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.