கல்லூரியில் கவர்னர் விருது தகுதிக்கான பயிற்சி முகாம்

0
47

யிற்சி முகாம்

வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட சாரண-சாரணிய இயக்கம் மூலம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள 22 பள்ளிகளைச் சேர்ந்த 350 சாரண- சாரணிய மாணவ -மாணவிகளுக்கு கவர்னர் விருது தகுதிக்கான மூன்று நாட்கள் பயிற்சி நடந்தது. கடந்த 2 -ந் தேதி முதல் நடைபெற்று வந்த பயிற்சி முகாமில் சாரண- சாரணிய உறுதி மொழி, உடற்பயிற்சி, தேச பக்தி, நல்லொழுக்கம், தற்கால நாட்டு நடப்பு, தனித் திறமையை வளர்த்துக் கொள்வது, கலை நிகழ்ச்சிகள், வெளியிடங்களுக்கு செல்லும் போது எவ்வாறு நன்னடத்தையுடன் நடந்து கொள்ள வேண்டும் போன்ற பல்வேறு பயிற்சிகள் இந்த முகாமில் வழங்கப்பட்டது.

ஜூன் மாதம் இறுதி நாள் பயிற்சி முகாமிற்கு ஆனைமலை மாவட்ட சாரண-சாரணிய அமைப்பு ஆணையாளர் மோணிக்கா தலைமை தாங்கி வாழ்த்து கூறினார். இந்த பயிற்சி முகாம் மூலமாக மாணவ -மாணவிகள் புதிய நண்பர்களை பெற்றிருப்பீர்கள், புதிய கருத்துகள் பரிமாறப்பட்டிருக்கும் அவைகளை உங்கள் வாழ்க்கைக்கு பாடமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்த அறிய வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி ஜூன் மாதம் நடைபெறும் கவர்னர் விருதை வால்பாறை பகுதி சாரண -சாரணிய மாணவ- மாணவிகள் பெற்று வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மாவட்ட சாரண -சாரணிய செயலாளர் ராஜா, பொருளார் முத்தையாசாமி, சாரண சாரணிய ஆசிரியர்கள் ரூத் பேபி, கலாராணி மற்றும் ராகவன் ஆகியோர் சாரண சாரணிய மாணவ மாணவிகளுக்கு பயிற்சியளித்தனர்.