கல்லீரலை பத்திரமாக பாதுகாக்கணும் முதியோரே!

0
8

ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாமல் இருப்பவர்கள், உடல் பருமன், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், மது அருந்து பவர்கள், வைரல் ஹெப்படைடிஸ் பி மற்றும் சி பாதிப்பு உள்ளவர்களுக்கு, கல்லீரல் கெட்டித்தன்மை அதிகரித்து, ‘சிரோசிஸ்’ என்ற பாதிப்பு ஏற்படலாம் என்கிறார்கள் டாக்டர்கள்

கல்லீரல் சிரோசிஸ் மற்றும் நான்காம் நிலை பைபிரோசிஸ் இருப்பவர்கள், ஆண்டுதோறும் ஸ்கேன் மற்றும் ரத்த பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கண் மஞ்சளாக இருப்பது, சிறுநீர் மஞ்சளாக இருந்தால் மட்டும் தான் கல்லீரல் பிரச்னை என நினைக்கின்றனர்.

பொதுவாக, 60,70 வயதுகளில் இதய பாதிப்பு காரணமாக கல்லீரல் சிரோசிஸ் வரலாம்; இதனை கார்டியாக்சிரோசிஸ் என்று கூறுகின்றோம். இவர்கள் முதலில், சர்க்கரை பாதிப்பை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

இது குறித்து, டாக்டர் மித்ரா பிரசாத் கூறியதாவது:

பொதுவாக, வயதானோர் உடற்பயிற்சி சரியாக செய்வதில்லை. சரியான புரோட்டீன் டயட் எடுத்துக்கொள்வதில்லை. இதனால் தசை இயக்கமும் குறைகிறது. இதுபோன்ற சிக்கல்களால் நாளடைவில், எதிர்ப்பு சக்தியும் குறைந்து விடுகிறது.

கல்லீரல் சிரோசிஸ் உள்ள சூழலில், அடிக்கடி பிற தொற்று பாதிப்புக்கும் ஆளாக நேரிடும். இயல்பாக உள்ளவர்களுக்கு சளி, காய்ச்சல் வரும்போது, இப்பாதிப்பு உள்ளவர்களுக்கு நுரையீரல் தொற்றாக மாறிவிடும்.

ஒவ்வொரு முறையும் தொற்று பாதிப்பு ஏற்படும் போது, அனைத்து உறுப்புகளும் ஒருவித அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். இதனால், சிறுநீரக பாதிப்பும் ஏற்படுகிறது. 70 வயதுக்கு மேல் இணை நோய்கள் காரணமாக, கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையும் செய்ய இயலாது.

இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்க, கட்டாயம் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். நல்ல சத்தான உணவு எடுத்துக்கொண்டு, எளிய உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்ய வேண்டும்.

சர்க்கரை பாதிப்பு உள்ளவர்கள், கல்லீரலில் கொழுப்பு சத்து உள்ளதா என்பதை பரிசோதித்துக்கொள்ள வேண்டியது கட்டாயம். புரோட்டீன் சத்துள்ள உணவு கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் போன்று 70 வயதை தாண்டிய முதியோரும், தேவையான தடுப்பூசிகளை டாக்டர்கள் பரிந்துரையுடன் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அவர்

கூறினார்.