கோவை; கோவை கலெக்டர் அலுவலகத்தில், மாநகராட்சி சார்பில் நேற்று நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது
கோவை நகரில் கோடை வெயில் சுட்டெரிப்பதால், தனியார் நிறுவனங்கள் சார்பிலும், தன்னார்வ அமைப்புகள் சார்பிலும், நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து செல்பவர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் பணியாளர்களின் தாகத்தை தணிக்கவும், மாநகராட்சி சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. காலை 11:00 மணிக்கு துவங்கி மதியம் 2:00 மணி வரை நீர் மோர் வினியோகிக்கப்படுகிறது.