கரு கலைப்பு மாத்திரை: சுய பயன்பாடு ஆபத்து! 34 கடைகள் உரிமம் ரத்து

0
14

கோவை; கோவை மண்டலத்தில், கரு கலைப்பு மருந்து விதிமுறைகள் மீறி விற்பனை செய்த, 27 கடைகளின் லைசென்ஸ் தற்காலிகமாகவும், 7 கடைகளின் லைசென்ஸ் நிரந்தரமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது

கோவை; கோவை மண்டலத்தில், கரு கலைப்பு மருந்து விதிமுறைகள் மீறி விற்பனை செய்த, 27 கடைகளின் லைசென்ஸ் தற்காலிகமாகவும், 7 கடைகளின் லைசென்ஸ் நிரந்தரமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது

கோவை மண்டல மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குனர் மாரிமுத்து கூறியதாவது:

கரு கலைப்பு மருந்துகள் பொதுவாக கடைகளில் எளிதாக கிடைக்காது; மருத்துவமனையுடன் இணைந்த மருந்தகங்களில் பல கட்டுப்பாடுகளுடன் கிடைக்கும். மருந்து விற்பனையாளர்களுக்கு இதுகுறித்த அறிவுறுத்தல்கள், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்காணிப்புகளும் மேற்கொண்டு வருகிறோம்.

தவிர, தயாரிப்பாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், வினியோகஸ்தர்களிடம் இம்மருந்து வினியோகிக்கப்பட்ட விபரங்கள் பெற்று அங்கு நேரடியாக சென்று ஆய்வு செய்வோம்

நடப்பாண்டு ஜன., 1 முதல் நவ., 30 வரை கருகலைப்பு மாத்திரை விற்பனையில் விதி மீறிய 27 மருந்தகங்கள் தற்காலிகமாகவும், 7 மருந்தகங்களின் லைசென்ஸ் நிரந்தரமாகவும் ரத்து செய்துள்ளோம். 13 கடைகள் மீது நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கரு கலைப்பு மருந்து உரிய விழிப்புணர்வு இன்றி பயன்படுத்தினால், அதிக உதிரபோக்கு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

கட்டாயம் மருத்துவர்களிடம் சென்றே, சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மருந்துகள் வழங்கி சிகிச்சை அளிக்கப்படுகிறது. கருகலைப்பு செய்பவர்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

எளிதில் வாங்க முடியாது!

பெரும்பாலான மருந்தகங்கள் கரு கலைப்பு மருந்துகளை வாங்கி விற்பதை தவிர்த்துவிடுகின்றன. கரு கலைப்பு மாத்திரை விற்கும்போது அதை பரிந்துரைத்த டாக்டர், அவரது பதிவு எண், மருத்துவமனை விபரம், வாங்குபவர்கள் விபரம் என அனைத்தும் குறிப்பேட்டில் பராமரிக்கவேண்டும். அவ்வளவு எளிதாக கருகலைப்பு மாத்திரைகளை கடைகளில் வாங்கிவிட முடியாது.

– மாணிக்கம் கருப்பையா,

மருந்தக உரிமையாளர், கோவை.