வாடிகன் சிட்டி,
வாடிகன் நகரில் புனித பீட்டர் சதுக்கத்தின் முன் கூடியிருந்த மக்களிடம் வாராந்திர கூட்டத்தில் பேசிய போப் பிரான்சிஸ், கர்ப்பம் ஒன்றை கலைப்பது என்பது ஒருவரை கொலை செய்வது போன்றது. ஒரு மனிதரை ஒழிப்பது என்பது ஒரு விவகாரத்திற்கான தீர்வா? என கூறினார்.
அவர், ஒன்றுமறியாத ஒன்றின் வாழ்க்கையை நசுக்கும் செயல் ஆனது மருத்துவ முறையா, கலாசாரம் நிறைந்த ஒன்றா அல்லது அவர் மனிதரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அர்ஜென்டினாவில் சட்டப்பூர்வ கருக்கலைப்பு மசோதாவுக்கு போப் பிரான்சிஸ் இந்த வருடம் எதிர்ப்பு தெரிவித்தார். அவரின் இந்த எதிர்ப்பினை அடுத்து கிறிஸ்தவ ஆலயத்தில் உறுப்பினராக இருந்த ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் அதில் இருந்து விலகுகிறோம் என தெரிவித்தனர்.