கோவை: கோவை மாவட்டத்திலிருந்து கனிமவளங்கள் கொண்டு செல்வதை தடுக்கவும் கண்காணிக்கவும், தாசில்தார் தலைமையிலான ஒன்பது குழுக்களை, மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது.
இந்த சிறப்பு குழுவினரின் நடவடிக்கையை கண்காணிக்க, சப்-கலெக்டர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலான மாவட்ட அளவிலான ஒரு சிறப்புக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக மாவட்ட அளவிலான குழுவில், ஏ.டி.எஸ்.பி., கனிமவளத்துறை துணை இயக்குனர் மற்றும் தாசில்தார்கள் இடம் பெற்றுள்ளனர்.
சட்டவிரோத கனிமங்களை கடத்துதல், இருப்பு வைத்தல் மற்றும் சேகரித்தல் தொடர்பாக புகார் தெரிவிக்க இலவச தானியங்கி தொலைபேசி, 1900 2333 995 வசதி செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் புகார்களை பெறும் வகையில், சுழற்சி முறையில் அதற்கான அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது