கனிமவளக் கொள்ளையை தடுக்க ரூ. 1.5 கோடியில் கேமரா: உயர் நீதிமன்றத்தில் கலெக்டர் பிரமாண பத்திரம் தாக்கல்

0
6

கோவை: கோவையில் கொள்ளை போகும் கனிமவளங்களை தடுக்க, ரூ. 1.5 கோடி மதிப்பிலான அதிநவீனகண்காணிப்பு கேமராக்களை பொருத்த உள்ளதாககலெக்டர் உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

கோவைமேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கனிமவளங்கள் கொள்ளை போவதை தடுக்க கலெக்டர் தலைமையில் அனைத்து துறையினரும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கனிமவளம் கொள்ளை போவதை தடுக்க புவியியல் மற்றும் கனிமவளத்துறை இணைந்து தொழில்நுட்ப ரீதியாக ஆய்வுப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இது குறித்து மக்கள் தகவல்தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் தானியங்கி மொபைல் எண் 1800-2333-9995 வழங்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கஇடம் தேர்வு செய்ய மாவட்ட எஸ்.பி.,க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், 108 செயற்கை நுண்ணறிவு கேமராக்கள், வாகன பதிவென்களை எளிதாக பதிவு செய்யும் 24 ஏ.என்.பி.,ஆர் கேமராக்கள் நிறுவப்படும்.

இவைபேரூர், ஆலாந்துறை, தொண்டாமுத்துார், காருண்யாநகர், மதுக்கரை, கே.ஜி.சாவடி பெ.ந.பாளையம், தடாகம் ஆகிய பகுதிகளில் பொருத்தப்படும்.மாவட்ட வன அலுவலர் வனத்துறை சோதனை சாவடிகளில், ஐந்து செயற்கை நுண்ணறிவு கேமராக்களை பொருத்த அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்க தனியார் ஏஜென்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்நிறுவன அறிக்கையின் படி கேமராக்கள், பி.எஸ்.என்.எல். இணையவசதி மற்றும் ஹார்டுடிஸ்க் உள்ளிட்டவை சேர்த்து, 1.5 கோடி செலவாகும்.

இது குறித்து நிதி வழங்க அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.கோர்ட் அறிவுறுத்தலின் படி மக்கள் புகார் தெரிவிக்க பிரத்யேக செயலிஉருவாக்கும் பணி தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ. 15,00,000ஆகும்.

அரசிடமிருந்து ஒப்புதல் பெற்றுவிரைவில் செயல்படுத்தப்படும். கனிமவளங்கள் கொள்ளை போகாமல் தடுக்ககண்காணிப்பு பணி மேற்கொள்ள துணை தாசில்தார் மற்றும் எஸ்.ஐ., வருவாய்ஆய்வாளர்,

வனக்காவலர், கிராமநிர்வாக அலுவலர் உள்ளிட்ட இரு தன்னார்வலர்கள் கொண்ட தனிகுழுபேரூர் மற்றும் வடக்கு தாலுகாக்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொறுப்பு அலுவலர்களாக பேரூர் மற்றும் வடக்கு தாசில்தார் நியமிக்கப்பட்டுள்ளனர். நியமிக்கப்பட்டதன்னார்வலர்கள் மீது வழக்கு ஏதேனும் இருக்கிறதா என்று விசாரிக்கப்பட்டுள்ளது.

வனப்பகுதியில் கனிமவளக்கொள்ளை நடக்கிறதா என்பதை கண்காணித்து தடுக்க வனக்காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.