பொள்ளாச்சி அருகே ஜமீன்ஊத்துக்குளியில் தென்னிந்திய அளவிலான கண் பார்வையற்றோருக்கான செஸ் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 120 பேர் கலந்துகொண்டனர். போட்டிகள் 8 சுற்றுக்களாக நடத்தப்படுகிறது.
இதில் முதல் நாள் 4 சுற்றுக்கள் நடக்கிறது. போட்டியில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகள், சான்றிதழ்கள், கோப்பைகள் வழங்கப்படுகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை பரிசளிப்பு விழா நடக்கிறது. இதற்கிடையில் இன்று 48 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொள்ளும் செஸ் போட்டி நடைபெறுகிறது.