கண்டன ஆர்ப்பாட்டம் பட்டதாரி ஆசிரியர்கள்

0
30

பொள்ளாச்சி: ஆசிரியர் கொலையை கண்டித்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சியில்நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டணம் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றிய தமிழ் ஆசிரியர் ரமணி, பள்ளி வளாகத்திலேயே படுகொலை செய்த சம்பவம், ஆசிரியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

படுகொலையை கண்டித்தும், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக கல்வி மாவட்ட தலைவர் ஷாஜஹான் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை தலைவர் தங்கபாசு, கல்வி மாவட்ட செயலாளர் குமரகுருபரன், ஓய்வு பெற்ற ஆசிரியர் பொன்ராசு, பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி சாதிக் பாட்ஷா ஆகியோர் பேசினர்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக கல்வி மாவட்ட செயலாளர் வடிவேல்குமார் நன்றி கூறினார். பொருளாளர் மார்க்கண்டேயன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.