கண்கள் பாதிக்கப்பட்ட மயிலுக்கு சிகிச்சை

0
5

கோவை, மார்ச் 21: கோவை நகரப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் மயில்கள் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த நிலையில் கே.என்.ஜி.புதூர் பகுதியில் உள்ள ஒரு சிறப்பு குழந்தைகள் பள்ளி முன்பு, நேற்று ஒரு மயில் வெகுநேரமாக நின்று கொண்டு இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள், நெருங்கி சென்று பார்த்த போது மயிலின் இரண்டு கண்களும் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் அங்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மயிலை பத்திரமாக மீட்டு, சிகிச்சை அளிக்க கொண்டு சென்றனர். அந்த மயிலுக்கு வனத்துறையினர் சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.