கட்டுமான பொருட்கள் திருடிய வாலிபருக்கு சிறை

0
7

கோவை:தெலுங்குபாளையம், சிதம்பரம் காலனியை சேர்ந்தவர் மோகன், 51. இவர் தெலுங்குபாளையம் புதுார், நாராயணசாமி நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். சிமென்ட், இரும்பு கம்பிகள் மற்றும் கட்டுமான பொருட்களை வைக்க, வீட்டில் அருகில் கொட்டகை அமைத்துள்ளார்.

நேற்று முன்தினம் மோகன். புதிய வீட்டின் கட்டுமான பணிகளை கவனித்துக் கொண்டு இருந்தார். அப்போது கட்டுமான பொருட்கள் வைத்திருந்த, கொட்டகையில் இருந்து வாலிபர் ஒருவர் இரும்பு கம்பிகளுடன் வருவதை பார்த்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வாலிபரை மடக்கிப்பிடித்தார்.

செல்வபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர் செல்வபுரம், தேவேந்திர வீதியை சேர்ந்த பாஸ்கர், 28 என்பது தெரியவந்தது. வாலிபரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்