கஞ்சா கடத்தியவர் கைது 5 கிலோ கஞ்சா பறிமுதல்

0
4

சூலூர்,மார்ச்20: கோவை மாவட்டம் சூலூரில் நேற்று காலை பெரியகுளம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் கையில் பையுடன் வந்த சந்தேகத்துக்கிடமான ஒரு நபரை நிறுத்தி விசாரணை செய்தனர்.அதில் அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதை தொடர்ந்து, அவரிடம் இருந்த சாக்கு பையை பிரித்து பார்த்தனர். அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம் பழயன்காடு பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி (56) என்பதும் இவர் தேனி மாவட்டத்தில் இருந்து மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து திருப்பூர் மற்றும் கோவை பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனையாளர்களுக்கு சப்ளை செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.தொடர்ந்து அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த சூலூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.