ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் இன்சூரன்ஸ் ஓய்வூதியர் கோரிக்கை

0
13

கோவை: கோவை மண்டல பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தின், 15வது பொது மாநாடு குஜராத்தி சமாஜ் அரங்கில் நேற்று நடந்தது.

மண்டலத் தலைவர் குருசாமி தொடங்கி வைத்தார். சங்கத்தின் துணைத்தலைவர் குருமூர்த்தி தீர்மானங்களை வலியுறுத்தி பேசியதாவது:

புதிய பென்ஷன் திட்டத்தையும், ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தையும் ரத்து செய்து அனைவரையும், 1995 பென்ஷன் திட்டத்தில் இணைக்க வேண்டும், அனைத்து உழைப்பாளர்களுக்கும் யுனிவர்சல் பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஒப்புக் கொள்ளப்பட்ட குடும்ப ஓய்வூதியத்தை, 15 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக உயர்த்தி வழங்கும், அரசாணையை வெளியிட வேண்டும், ஊதிய உயர்வுக்கேற்ப பென்ஷனை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை, மத்திய அரசும், ஜிப்சா நிர்வாகமும் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

மண்டல துணைத் தலைவர் சேகர், பொதுச் செயலாளர் சங்கரநாராயண், மண்டல பொருளாளர் லட்சுமணன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.