கோவை, மார்ச் 21: டெல்லியை சேர்ந்தவர் வக்கீல் (34). இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கோவை வந்தார். இங்கு போத்தனூர் பகுதியில் தங்கிருந்து குனியமுத்தூரில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வக்கீல் சுந்தராபுரம் டீச்சர்ஸ் காலனி பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென அவரை வழிமறித்து மது குடிக்க பணம் கேட்டார். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்றார்.
தனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை காட்டி மிரட்டினார். பின்னர் அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்து தப்பி சென்றார். இதுகுறித்து வக்கீல் சுந்தராபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் வக்கீலிடம் அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்தது போத்தனூர் முத்தையா நகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.