கொப்பரை தேங்காய் ஏலம்
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு ஆனைமலை, கோவை, பொள்ளாச்சி, நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொப்பரை தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். மொத்தம் 608 மூட்டைகளில் கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டு இருந்தது.
காலை 10 மணிக்கு தொடங்கிய ஏலத்தில் மதியம் 2 மணி வரை கொப்பரை தேங்காய்களை தரம் பிரிக்கும் பணி நடந்தது. தாராபுரம் காங்கேயம் மற்றும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 10 வியாபாரிகள் பொது ஏலத்தில் கலந்து கொண்டனர்
வரத்து அதிகரிப்பு
இதில் 309 மூட்டைகள் கொண்ட முதல் ரக கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றிற்கு 78 ரூபாய் 50 காசு முதல் 84 ரூபாய் வரை ஏலம் விடப்பட்டது 299 மூட்டைகள் கொண்ட 2-ம் ரக கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றிற்கு 59 ரூபாய் முதல் 75 ரூபாய் 30 காசு வரை ஏலம் விடப்பட்டது.கொப்பரை தேங்காய் தேவை அதிகரிப்பால் 2.15 பைசா விலை அதிகரித்தது. மேலும், கடந்த வாரத்தைவிட 155 மூட்டைகள் கூடுதலாக கொண்டு வரப்பட்டு இருந்தது. இந்த தகவலை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தெரிவித்தார்.