ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர விழா

0
161

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கொடியேற்றம்

திருவையாறில் பிரசித்தி பெற்ற ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடிப்பூர விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடிப்பூர விழா நேற்று காலை தர்மசம்வர்த்தினி ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். விழா நாட்களில் தினமும் காலையும், மாலையும், சாமி புறப்பாடு நடைபெறுகிறது.

தேரோட்டம்

28-ந் தேதி(வியாழக்கிழமை) ஆடி அமாவாசை நாளில் ஐயாறப்பர் கோவில் தென்கைலாயத்தில் அப்பர் கயிலைக்காட்சி நடைபெறுகிறது.31-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுகிறது. தேரில் அம்மன் அமர்ந்து 4 வீதிகளில் உலா வரும் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுப்பார்கள். ஆகஸ்டு 1-ந் தேதி கொடி இறக்கம் நடைபெறுகிறது.