கோவை; வேளாண் பல்கலை வளாகத்தில், தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் பயோடெக்னாலஜி மையம் சார்பில், ‘தாவர திசு வளர்ப்பு நுட்பங்கள்’ எனும் 5 நாள் பயிற்சி முகாம் துவங்கியது.இந்தியாவில் 40 சதவீத வாழைத்தோட்டங்கள், தரம் மற்றும் சீரான வளர்ச்சிக்காக திசு வளர்ப்புத் தாவரங்களையே நம்பி உள்ளன.
உலக அளவில், திசு வளர்ப்பு சந்தை ஆண்டுதோறும் 7.2 சதவீதம் வளர்ந்து வருகிறது. நவீன விவசாயத்தில் இது மிகுந்த முக்கியத்துவம் பெறுவதாக, பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது. அதிக மகசூல் தரும், நோய் எதிர்ப்பு கொண்ட பயிர்களை உருவாக்குவதற்கான தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. தாவர உயிரித் தொழில்நுட்பத் துறை தலைவர் கோகிலா தேவி, தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மைய இயக்குநர் செந்தில், தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குநர் ரவிகேசவன், தாவர உயிரியல் தொழில்நுட்பத் துறை இணை பேராசிரியர் ராஜேஷ் மற்றும் நாடு முழுதும் இருந்து விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.