கோவை மாவட்டம் காரமடை அருகே ஆசிரியர் காலனி பகுதியில் கனரா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர், அந்த ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.
அப்போது அங்கிருந்த எச்சரிக்கை அலாரம் ஒலித்ததும்,மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து காரமடை போலீஸ் நிலையத்துக்கு வங்கி மேலாளர் தகவல் தெரித்தார். இதன் பேரில் காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.