எஸ். என். எஸ்., கல்லுாரி முதல்வருக்கு கவுரவம்

0
12

கோவை; டாக்டர் எஸ்.என்.எஸ்., கல்வியியல் கல்லுாரியின் முதல்வர் மேரி நோய லீனாவிற்கு, ‘லிஸ்யூ ஆச்சார்யா’ விருது வழங்கப்பட்டது. அருட்தந்தை லியோ ஜோசப் மற்றும் அருட்தந்தை பிலிப்ஸ் பனகல் ஆகியோர், விருது வழங்கி கவுரவித்தனர்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நல்வாழ்வுக்கான தொலைநோக்கு பார்வை, சிறந்த தலைமைத்துவம், அயராத அர்ப்பணிப்பு ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில், இந்த விருது முதல்வர் மேரி நோய லீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், லிஸ்யூ இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் பிலிப்ஸ் பொன் தேக்கன் மற்றும் லிஸ்யூ மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜாய் அரக்கல் ஆகியோர் கலந்து கொண்டனர்.