கோவை : சரவணம்பட்டி, வழியம்பாளையம், எஸ்.என்.எஸ்.,தொழில்நுட்பக் கல்லுாரி வளாகத்தில், போட்டித் தேர்வுகள் மையம் துவக்க விழா நடந்தது.
சிறப்பு விருந்தினர்கள் இந்திய கடற்படையின் உள்நாட்டு மயமாக்கல் மற்றும் சுயசார்பு மையத்தின் இயக்குனர் கமாண்டோ பாலசுந்தரம், கமாண்டர் (ஓய்வு) கார்த்திக் ஆகியோர், மாணவர்களுடன் உரையாடினர்.
அப்போது அவர்கள், ‘கல்லுாரியில் படிக்கும் போதே யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., பாதுகாப்புத் துறை, வங்கி போன்ற போட்டித் தேர்வுகளுக்கு, மாணவர்கள் தயாராக வேண்டும். எந்த பதவியில் இருந்தாலும் சமூக முன்னேற்றத்திலும், நாட்டின் வளர்ச்சியிலும் மாணவர்கள் பங்காற்ற வேண்டும்’ என அறிவுரை வழங்கினர்.
எஸ்.என்.எஸ்., கல்வி குழுமத்தின் தொழில்நுட்ப இயக்குனர் டாக்டர் நளின் விமல்குமார், முதல்வர் செந்துார் பாண்டியன், துணை முதல்வர் தமிழ் செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்