கோவை ரெயில்நிலையம்
கோவை ரெயில் நிலையம் வழியாக சென்னை, மதுரை, நாகர் கோவில், கேரளா, பெங்களூரு உள்பட பல்வேறு நகரங்களுக்கு 80-க்கும் மேற்பட்ட ரெயில்கள் தினசரி வந்து செல்கின்றன.
இதில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கி றார்கள். இதன் மூலம் சென்னைக்கு அடுத்தபடியாக அதிகளவு வருமானம் வரும் ரெயில் நிலையமாக கோவை திகழ்கிறது.
இந்த நிலையில் கோவை ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மற்றும் 2-வது நடைமேடைக்கு பயணிகள் செல்ல வசதிக்காக எஸ்கலேட்டர் அமைக்கப்பட்டது. அங்கு பராமரிப்பு பணி நடைபெறுவதால் செயல்படாமல் உள்ளது.
செயல்படாத எஸ்கலேட்டர்
ஆனால் 1 ஏ நடைமேடைக்கு செல்லவும், அங்கிருந்து ரெயில் நிலையத்துக்கு வெளியே வரவும் வசதியாக எஸ்கலேட்டர் அமைக்கப்பட்டது. அது கடந்த சில நாட்களாக செயல்படாமல் உள்ளது.
இதனால் பயணிகள் ஏறி நின்றதால் தானாக மேலும், கீழும் சென்று வந்த எஸ்கலேட்டர் தற்போது செயல்படாமல் உள்ளது. எனவே அந்த எஸ்கலேட்டரை பயணிகள் படி போல் நடந்தே ஏறி, இறங்கி சென்று வருகின்றனர். இதன் காரணமாக முதியவர்கள், நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பயன்பாட்டுக்கு வர வேண்டும்
இது குறித்து ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் கூறுகையில், கோவை ரெயில்நிலையத்தின் முன் பகுதியில் 1 ஏ நடைமே டைக்கு செல்லவும், அங்கிருந்து வெளியே எளிதாக வரவும் வசதி யாக எஸ்கலேட்டர் அமைக்கப்பட்டது.
அதை பயணிகள் அதிகம் பேர் பயன்படுத்தி வந்தோம். ஆனால் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அந்த எஸ்கலேட்டர் செயல்படாமல் உள்ளது.
இதனால் கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். எனவே எஸ்கலேட்டரை உடனடியாக சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.