இந்தியா நடத்தும் பதில் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் திணறி வருகிறது.
பாகிஸ்தானின் லாகூரில் இம்ரான்கான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பலூசிஸ்தான் ஆதரவாளர்களும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுபடுவதால், மூன்று முனைகளிலும் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியா நடத்தும் பதில் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் திணறி வருகிறது.

சுட்டு வீழ்த்தியது!
எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்த முயற்சி செய்த ட்ரோன்கள், போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது. பாகிஸ்தானின் தாக்குதல் சதி திட்டங்களை இந்தியா முறியடித்து வருகிறது. குஜராத்தில் பாகிஸ்தானின் 3 ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது. ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் பாகிஸ்தானின் 70 ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது.
10 நாடுகளுடன் பேச்சு!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் 10 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு நடத்தினார். அமெரிக்கா, கத்தார், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், சவுதி அரேபியா, ஈரான், இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.