எலும்பு மஜ்ஜைக்கான இலவச ஆலோசனை முகாம்

0
7

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில், குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்த புற்றுநோய், எலும்பு மஜ்ஜை பிரச்னைகளுக்கான இலவச ஆலோசனை முகாம் நடக்கிறது.

மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது: குழந்தைகளுக்கு ரத்த சோகை, தலசீமியா, சிக்கில் செல் அனீமியா உள்ளிட்ட ரத்தம் சம்பந்தமான பிரச்னை இந்தியாவில் அதிக அளவு உள்ளது.

குழந்தைகளுக்கு ரத்தப் புற்றுநோய் அதிக அளவிலும், அடுத்தபடியாக மூளைகளில் வரும் கட்டிகள், வயிற்றுப் பகுதியில் வரும் புற்றுநோய் கட்டிகள், நெறிக்கட்டி, கல்லீரல், சிறுநீரக புற்றுநோய், எலும்பு மற்றும் தசைகளில் வரும் புற்றுநோய் காணப்படுகிறது.

இரத்த சோகை, கல்லீரல் வீக்கம், மண்ணீரல் வீக்கம் போன்ற அறிகுறிகள் தலசீமியா நோய்க்கான அறிகுறிகளாகும். இரத்த சோகை, எலும்புகளில் வலி, நுரையீரல் பாதிப்பு, பக்கவாதம் போன்ற அறிகுறிகள் சிக்கில் செல் அனீமியா நோய்க்கான அறிகுறிகளாகும்.

தீராத காய்ச்சல், எலும்புகளில் வலி, கழுத்து, அக்குள், தாடையிடுக்கு பகுதிகளில் நெறிக்கட்டி வீக்கம், கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம், ஈறுகள் மற்றும் தோலில் ஏற்படும் இரத்தக்கசிவு போன்றவை, இரத்த புற்றுநோய்க்கான அறிகுறிகளாகும்.

ரத்தப் புற்றுநோயை கீமோதெரபி வாயிலாகவும், தீவிரமான ரத்தப் புற்றுநோயை எலும்பு மஜ்ஜை மாற்றம் வாயிலாகவும் குணப்படுத்தலாம். குழந்தைப்பருவ புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் குணப்படுத்துவது எளிது.

கோவை-அவிநாசி ரோட்டில் உள்ள கே.எம்.சி.எச்.,ல் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்த புற்றுநோய், எலும்பு மஜ்ஜை பிரச்னைகளுக்கான இலவச ஆலோசனை முகாம், வரும் 30ம் தேதி வரை, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர பிற நாட்களில், காலை, 9:00 முதல் பிற்பகல், 3:00 மணி வரை நடக்கிறது.

இந்த முகாமில் பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கு தேவையான பரிசோதனைகள் 25 சதவீத சலுகைக் கட்டணத்தில் செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, 733 9333 485 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.