எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே? டி.டி.வி. தினகரன்

0
110
சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி. தினகரன் கூறும்பொழுது, மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் மக்களின் தீர்ப்பினை ஏற்று கொள்கிறோம்.  எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
எங்களது கணக்கெடுப்பின்படி ஏறக்குறைய 300 பூத்களில் அ.ம.மு.க.வின் வாக்குகள் பூஜ்யம் என காட்டியுள்ளது.  எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே? ஒரு வாக்குச்சாவடியில் அ.ம.மு.க. முகவரின் வாக்கு கூடவா பதிவாகாமல் போயிருக்கும்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும்.  அ.ம.மு.க.வின் செல்வாக்கு போகப்போக தெரியும் என்று கூறினார்.
மக்கள் நீதி மய்யம் கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தலுக்கு தேர்தல் மக்களின் மனநிலை மாறும் என்றார்.  தேர்தல் தோல்வி குறித்து ஆராயவேண்டிய அவசியம் இல்லை, எதிர்காலத்தில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என்றும் அவர் கூறினார்.