ஊராட்சி மன்ற அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

0
82

கோவை துடியலூரை அடுத்த பன்னிமடை ஊராட்சியில் மாதம் ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது 40 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

எனவே 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யக் கோரி பன்னீர் கார்டன். ஆண்டாள் அவன்யூ, சூர்யா கார்டன் வாரி கார்டன், கடைவீதி, முல்லை நகர், விநாயகா கார்டன், மினு லட்சுமி கார்டன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் நேற்று பன்னிமடை ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது அவர்கள், சீரான குடிநீர் வினியோகம், குப்பைகளை அகற்றுவது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண் டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அவர்கள், பெரியநாயக்கன் பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் லதா, 10 நாட்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.