ஊராட்சியாகவே தொடர கோரி கூட்டத்தில் தீர்மானம்

0
13

சூலுார்; பேரூராட்சியாக தரம் உயர்த்தாமல், ஊராட்சியாகவே தொடர அனுமதிக்க கோரி, அரசூர் ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசூர் ஊராட்சி மன்ற சாதாரண கூட்டம், தலைவர் மனோன்மணி தலைமையில் நடந்தது. அரசூர் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்தினால், வரியினங்கள் உயர்ந்து பொதுமக்கள் பாதிக்கப்படுவர்.

100 நாள் வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்படுவர். விளைநிலங்கள் அதிகம் உள்ள குக்கிராமங்கள் உள்ளதால், ஊராட்சியாகவே தொடர அரசு அனுமதிக்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.