உள்ளாட்சி பிரதிநிதிகள் நெகிழ்ச்சி : பதவிக்காலம் முடிவதால் சந்திப்பு

0
13

சூலுார்; ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வருகிறது. சூலுார் ஒன்றியத்தில், 17 ஊராட்சிகள் உள்ளன.

ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர் மற்றும் மாவட்ட ஊராட்சி தலைவர் ஆகியோர் உள்ளனர்.

உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவதால், சூலுார் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் நன்றி தெரிவிக்கும் கூட்டம், நீலம்பூரில் நடந்தது. கூட்டமைப்பு தலைவர் வேலுசாமி வரவேற்றார். ஐந்து ஆண்டுகள் மக்கள் சேவை புரிய உறுதுணையாக இருந்த ஒன்றிய அதிகாரிகள், எம்.எல்.ஏ.,மற்றும் எம்.பி.,க்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

எம்.எல்.ஏ., கந்தசாமி பேசுகையில், ஊராட்சி தலைவர் பதவி தான் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை தீர்க்கும் முக்கிய பொறுப்பாகும். அதுதான் மனதுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது. வரும் தேர்தலிலும் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள், என்றார். செயலாளர் சந்திரசேகர் நன்றி கூறினார்.