ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்திற்கு உட்பட்ட கூமாட்டி மலைவாழ் மக்கள் கிராமத்தில் உலக மலைவாழ் மக்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன், கூமாட்டி மலைவாழ் மக்கள் தலைவர் மணிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் மலைவாழ் மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து வனச்சரகர் மணிகண்டன் மலைவாழ் மக்களிடம் பேசும்போது கூறுகையில், வனம் மற்றும் வன உயிரினங்களை பாதுகாக்க வேண்டும். வன உயிரினங்களை வேட்டையாடுதலை தடுப்பதற்கு வனத்துறைக்கு மலைவாழ் மக்கள் உதவ வேண்டும். வனப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் வனத்துறையுடன் இணைந்து பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார். விழாவில் வனவர், வனக்காப்பாளர், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் கலந்துகொண்டனர்.