கோவை; மதுக்கரை நைட்டிங்கேல் கல்விக் குழுமம் சார்பில், முதியோர் இல்லத் திறப்பு விழா மற்றும் மாணவர்களின் விளக்கு ஏற்றும் விழா, வெள்ளை அங்கி அணிவிக்கும் விழா என, முப்பெரும் விழா நடந்தது.
சிறப்பு விருந்தினர், முன்னாள் மத்திய அமைச்சர் சஞ்சய் பஸ்வான் முதியோர் இல்லத்தை திறந்து வைத்து, தேவையான பொருட்களை பரிசாக வழங்கினார். அவர் முன்னிலையில் முப்பெரும் விழா நடந்தது.
அவர் பேசுகையில், ”மருத்துவத்துறையில் நர்சிங் மற்றும் பிசியோதெரபி துறைகளின் பங்களிப்பு முக்கியமானது. இப்படிப்புகளுக்கு உலகெங்கும் வாய்ப்புகள் உள்ளதால், படிக்கும் போதே பல மொழிகளை கற்றுக்கொள்வதுடன், திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்,” என்றார்.
தொடர்ந்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நைட்டிங்கேல் மற்றும் சாய் கல்லுாரிகளின் தாளாளர் மனோகரன், செயலாளர்கள் ராஜீவ், சஞ்சய் மற்றும் முதல்வர்கள் சோபியா ஜூலியட், ராஜன், அன்னம் ஆகியோர் கலந்துகொண்டனர்.