ஈ.வெ.ரா., குறித்து அவதுாறு: சீமான் மீது கமிஷனரிடம் புகார்

0
7

கோவை; ஈ.வெ.ரா., குறித்து அவதுாறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் கடலுாரில் நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசும் போது ஈ.வெ.ரா., குறித்து அவதுாறாக பேசினார். அதை நாம் தமிழர் கட்சியின் அதிகார பூர்வமான யூடியூப் சேனலில் பதிவு செய்து உள்ளனர். அரசியல் லாபத்திற்காக ஈ.வெ.ரா.வின் மதிப்பை சீர்குலைக்கும் வகையில், ஆதாரம் இன்றி பொய்யான செய்தியை சீமான் தொடர்ந்து பேசி வருகிறார்

இதனால், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். மேலும், யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவை நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.