ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல்; கோவையில் லீவு விட அறிவுறுத்தல்

0
5

கோவை; கோவை, தொழிலாளர் நல உதவி ஆணையர் (அமலாக்கம்) காயத்ரி வெளியிட்டுள்ள அறிக்கை:

வரும் 5ம் தேதி, ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடைபெறும் நாளில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், கடைகள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும், ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளர்களாக பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு, வரும் 5ம் தேதி, சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். விடுமுறை அளிக்காத நிறுவனம், உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக, 99446 25051, 98404 56912, 86674 72139 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.