ஈச்சனாரி விநாயகர் கோயிலில் நாள்தோறும் பிரசாதம் வழங்கும் திட்டம் அமைச்சர் சேகர் பாபு துவங்கி வைக்கிறார்

0
62

மதுக்கரை.டிச.20: தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்கு நாள்தோறும் பிரசாதம் வழங்கும் திட்டத்தில் இலவசமாக பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை மற்றும் மாசாணியம்மன் கோயில்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை ஈச்சனாரியில் உள்ள விநாயகர் கோயிலில் இந்த திட்டம் துவங்கப்பட உள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திட்டத்தை துவங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் செந்தில் பாலாஜி, பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.