இ.இ.பி.சி., தேசிய விருது வென்றது சி.ஆர்.ஐ . பம்ப்ஸ்

0
7

கோவை; பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சிலின்(இ.இ.பி.சி.,) பெரிய தொழில் துறை பிரிவில் சிறந்த ஏற்றுமதிக்கான தேசிய விருதை சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம் பெற்றது.மத்திய அரசு வணிகம், தொழில்துறை அமைச்சர் ஜிதின் பிரசாதா தலைமையில் நடந்த விழாவில், விருது வழங்கப்பட்டது. விருதை சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனத்தின், செயல் இயக்குநர் சாஹித்யா சவுந்தரராஜன் பெற்றுக்கொண்டார்.

அவர் கூறியதாவது:நிறுவனம் தற்போது தொழில்துறை, வணிக கட்டடங்கள், கழிவுநீர் மேலாண்மை, நகராட்சி நீர் வழங்கல், சோலார், நீர்ப்பாசனம் மற்றும் குடியிருப்புகள் உட்பட பல்வேறு துறைகளில் பம்பிங் தீர்வுகளை வழங்கி வருகிறது. எங்களின் ஒவ்வொரு தயாரிப்பும் தனித்தன்மையுடன் உள்ளது. ‘மேட் இன் இந்தியா’ முயற்சியை முன்னெடுப்பதன் மூலம், நாங்கள் நமது ஏற்றுமதி திறன்களை மேம்படுத்துவதோடு, உலக அரங்கில் இந்தியாவின் பொறியியல் திறன்களையும் முன்வைக்கிறோம். உலகளாவிய பல்வேறு தேவைகளுக்கு வலுவான, திறமையான மற்றும் நிலையான பம்பிங் தீர்வுகளை வழங்குவது எங்கள் தனித்திறன்,” என்றார்.