இளையராஜாவின் இசை நிகழ்ச்சி, ஜூன் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, ஏற்பாட்டாளர் ‘மவுனராகம்’ முரளி கூறினார்.
அவர் கூறியதாவது:
கோவையில் நடைபெறவுள்ள, இசையமைப்பாளர் இளையராஜாவின் நேரலை இசை நிகழ்ச்சி, மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியை, கோவைபுதூர் அருகேயுள்ள ஜி-ஸ்கொயர் வளாகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 20 முதல், 25 ஆயிரம் பேர் வரை அமரும் வகையில் இடவசதி செய்யப்படுகிறது.
பார்வையாளர்கள் வெளியேற, நான்கு வழிகள் அமைக்கப்படும். ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், கோவைபுதூர் பிரிவு ஆகிய இடங்களிலிருந்து, வாகன வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இயற்கையான சூழலில், இசைஞானியின் இசையை கேட்க, ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்நிகழ்ச்சி வரும் 18ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக வரும், ஜூன், 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.