இளைஞர் தமிழ் மன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடல்

0
12

கோவை, ஜன.3: 1961ம் ஆண்டு முதல் 1981ம் ஆண்டு வரை மணியக்காரன்பாளையம் இளைஞர் தமிழ் மன்றத்தின் உறுப்பினர்களாக இருந்தவர்களின் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் தொடர்ந்து 6வது ஆண்டாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இளைஞர் மன்ற முன்னாள் தலைவர் கா.வெங்கடாசலம் தலைமை தாங்கினார். முருகேசன், ஆறுக்குட்டி, செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக பாண்டியன் சோப் அதிபர் ஜே.அருள் மற்றும் ஆடிட்டர் ராமமூர்த்தி, கணபதி அசோகன், ஆவாரம்பாளையம் நாகராஜ், மனோகரன் உட்பட 30 பேர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை 10 ஆண்டுகளுக்கும் மேலாக உறுப்பினராக உள்ள மாமன்ற உறுப்பினர் மு.கிருஷ்ணசாமி செய்திருந்தார். அனைவருக்கும் சிறப்பான முறையில் மதிய உணவு வழங்கப்பட்டது.