இல்லந்தோறும் உறுப்பினர் சேர்க்கை பணி

0
78

இல்லந்தோறும் உறுப்பினர் சேர்க்கை பணி

தி.மு.க. இளைஞர் அணி சார்பில் இல்லந்தோறும் உறுப்பினர் சேர்க்கை பணியை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

உறுப்பினர் சேர்க்கை

கோவை ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் இல்லந்தோறும் உறுப்பினர் சேர்க்கை பணி தொடக்க விழா கோவை மசக்காளிபாளையத்தில் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், டாக்டர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு இளைஞர் அணியை சேர்ந்த நிர்வாகிகளிடம் உறுப்பினர் சேர்க்கை படிவத் தை வழங்கினார். இதையடுத்து அவர், அந்த பகுதியில் உள்ள சில வீடுகளுக்கு சென்று தி.மு.க. இளைஞர் அணியில் உறுப்பினர்க ளை சேர்க்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க.வில் சேர விருப்பம்

தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோரின் உத்தரவின்பேரில் இல்லந்தோறும் உறுப்பினர் சேர்க்கை பணி கோவையில் இன்று (நேற்று) முதல் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இளைஞர் அணி நிர்வாகிகள் நேரில் சென்று, அந்த வீடுகளில் இருக்கக்கூடிய இளைஞர்களை, தி.மு.க.வில் சேர விருப்பம் இருக்கிறதா என்று கேட்டு சேர்க்க உள்ளனர்.

படிவம் பூர்த்தி

உறுப்பினர் சேர்க்கை படிவத்தை நிர்வாகிகள் பூர்த்தி செய்யக் கூடாது. யார் சேர விரும்பம் இளைஞர்கள் தான் பூர்த்தி செய்ய வேண்டும். அதன்படி தி.மு.க. இளைஞர் அணியில் இளைஞர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.