கோவை பெரிய கடைவீதியில் உள்ள, பூம்புகார் கைவினைப்பொருட்கள் விற்பனை அங்காடியில், கார்த்திகை பண்டிகையை முன்னிட்டு, தீபத் திருவிழா விளக்கு விற்பனை கண்காட்சி நடக்கிறது.
இந்த கண்காட்சியில் பித்தளையில் செய்த விநாயகர் விளக்கு, பிரதோஷ விளக்கு, அஷ்டலட்சுமி விளக்கு, கஜலட்சுமி விளக்கு, பாலாஜி விளக்கு, விஷ்ணு விளக்கு, மூகாம்பிகை விளக்கு, அருணாச்சலேஸ்வர் விளக்கு, ரங்கநாதர் விளக்கு, சங்கு சக்கர விளக்கு, சிறிய அகல் விளக்கு, அஸ்தோத்ரம் விளக்கு, காஞ்சி காமாட்சி விளக்கு, தாமரை பூ மாடல் விளக்கு, அன்னம் தொங்கு விளக்கு, யானை விளக்கு, விநாயகர் நின்ற நிலை விளக்கு, வாத்து மாடல் நந்தா விளக்கு, முருகன் அறுபடை விளக்கு, முருகன் விளக்கு…அப்பாடா, விளக்குகளில் இத்தனை வகையா என பிரமிப்பு ஏற்படுகிறது.
இன்னும் இருக்கு…
பித்தளை சிம்னி விளக்கு, குபேர விளக்கு, பேன்சி கேரளா விளக்கு, பாலாடை விளக்கு, மூலிகையில் செய்த சங்கு விளக்கு, பஞ்ச காவிய விளக்கு, மண்ணால் செய்த விநாயகர் விளக்கு, உருளி விளக்கு, தாமரை விளக்கு, மண் விளக்கு, பீங்கான் விளக்கு…இப்படி பட்டியல் இன்னும் நீள்கிறது.
பூம்புகார் மேலாளர் மாலதி கூறுகையில், ”கார்த்திகை சிறப்பு விளக்கு கண்காட்சி, வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, அதிக புதிய மாடல் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. விளக்குகளுக்கு 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படுகிறது,” என்றார்.