கோட்டூர் அருகே உள்ள அங்கலகுறிச்சி துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் கோவை அரசு ஆஸ்பத்திரி கண் டாக்டர் சேதுலட்சுமி கலந்துகொண்டு பரிசோதனை செய்தார். முகாமில் கண்ணில் ஏற்படும் பிரச்சினைகளான தூரப்பார்வை, கிட்ட பார்வை, கண்ணில் புரை போன்ற அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அறுவை சிகிச்சை தேவைப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்யப்பட்டனர். முகாம் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். முகாமில் செவிலியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.