இலங்கை முன்னாள் பிரதமர் ஓய்வுக்காக ஊட்டி வருகை

0
15

கோவை : கோவை வந்த இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, ஓய்வுக்காக நேற்று ஊட்டிக்கு புறப்பட்டுச் சென்றார்.

இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே. இவர் நேற்று மதியம், 2:00 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தார். தொடர்ந்து அவர், பொள்ளாச்சி ஆனைமலை மாசானியம்மன் கோவில் மற்றும் பேரூர் கோவிலுக்கு சென்று, சுவாமி தரிசனம் செய்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக, பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து அவர், நேற்று மாலை ஊட்டிக்கு புறப்பட்டு சென்றார். ஊட்டி கோல்ப் கிளப் ரோட்டில் உள்ள, ஒரு வீட்டில் தங்கி ஓய்வு எடுக்க உள்ளார்.

ஊட்டியில், இரண்டு முதல், மூன்று நாட்கள் தங்கும் ரணில் விக்கிரமசிங்கே, நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. தொடர்ந்து, கோவை வழியாக மீண்டும் இலங்கை புறப்படுகிறார். அவர் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.