இரண்டாவது நாளாக மழை; கோவையில் குளிர்ந்த காலநிலை

0
7

கோவை; இரண்டாவது நாளாக கோவையின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை கொட்டியது.

வங்கக் கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய ஆறு மாவட்டங்களில், நேற்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று மதியம் 2:00 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மாலை 3:00 மணிக்கு மேல், பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை கொட்டியது. இதன் காரணமாக, குளிர்ந்த காலநிலை ஏற்பட்டது.

மாவட்டத்தில் பதிவான மழை அளவு

விமான நிலையம், 29.90 மி.மீ., வேளாண் பல்கலை, 22.00, பெரிய நாயக்கன்பாளையம், 6.30, மேட்டுப்பாளையம், 19.00, பில்லுார் அணை, 12, அன்னுார், 2.40, கோவை தெற்கு தாலுகா, 19, சூலுார், 30.30, வாரப்பட்டி, 6, தொண்டாமுத்துார், 14, மதுக்கரை தாலுகா, 8, போத்தனுார், 17.80, கிணத்துக்கடவு, 1, ஆனைமலை, 1, ஆழியார், 1 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.