வால்பாறை பகுதி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப் பகுதிகளை கொண்ட இடமாக உள்ளது. இந்த வனப் பகுதியில் வாழ்ந்து வரக்கூடிய வனவிலங்குகள், பறவைகள், வனப் பகுதிகள் மற்றும் இயற்கையை பாதுகாப்பது குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும், அரசு சுவர்களில் பல்வேறு வகையான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு சுவர்கள் சேதமடைந்து வருவதை தடுக்கும் வகையிலும் வனத்துறை சார்பில் பல்ேவறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி வால்பாறை வனப் பகுதி வனவிலங்குகள் வாழும் பகுதி இயற்கையோடு நாம் ஒன்றிணைத்து வாழ வேண்டும், பல்வேறு வகையான அரிய வகை வனவிலங்குகள், பறவைகள் வால்பாறை சுற்று வட்டார வனப் பகுதியில் வாழ்ந்து வருகிறது என்பதை உணர்த்தும் வகையிலும் வனத் துறையின் இயற்கை வனவள பாதுகாப்பு மையத்தின் சிறப்பு ஓவியர்கள் இந்த ஒவியங்களை வரைந்து வருகின்றனர்.
முதல் கட்டமாக வால்பாறை நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாக சுவற்றில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பள்ளி வளாகங்கள் உள்பட பல்வேறு அரசு கட்டிட சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.