கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும் இன்டர்நெட் சொசைட்டி சென்னை பிரிவு இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
எஸ்.என்.ஆர்.,சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் மற்றும் இன்டர்நெட் சொசைட்டி சென்னை பிரிவின் தலைவர் சுதா புவனேஸ்வரி ஆகியோர், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதன்மூலம், கல்லுாரியில் இன்டர்நெட் சொசைட்டி மாணவர் கிளை துவங்கப்படவுள்ளது. மாணவர்களுக்கு உலகளாவிய இணைய மேலாண்மை, டிஜிட்டல் கொள்கை மற்றும் புதிய தொழில் நுட்ப திறன்களை பெற முடியும்.
இன்டர்நெட் சொசைட்டி மூலம் வழங்கப்படும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சிகளை பெற முடியும். இது, மாணவர்களின் கல்வி மற்றும் தொழில் முறை வளர்ச்சியை மேம்படுத்தும் என, சுதா புவனேஸ்வரி தெரிவித்தார்.
எஸ்.என்.ஆர்.,சன்ஸ் அறக்கட்டளையின் கல்வித்துறை இயக்குனர் அலமேலு, ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரியின் முதல்வர் டேவிட் ரத்னராஜ் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.