இனி பேப்பர், பேனா வேண்டாம்! சைபர் கிரைம் புகார்களை அளிக்க

0
85

கோவை: நாளுக்கு நாள் பெருகி வரும் சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, வந்து விட்டது, ‘ஸ்மார்ட் கிரைம் போர்டல்’.

கோவை மாநகரில் இணைய வழியில் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினம்தோறும் நுாற்றுக்கணக்கான மக்கள் தங்களின் பணத்தை, சைபர் கிரைம் மோசடியில் இழக்கின்றனர்.

இந்தாண்டு மட்டும் இதுவரை ரூ.91 கோடிக்கும் மேல் பணத்தை கோவை மக்கள் இழந்துள்ளனர். ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சைபர் கிரைம் தொடர்பான புகார்களை விசாரிக்க, மாநகர கமிஷனர் அலுவலகத்தில் மாநகர சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது.

இங்கு, ஆன்லைன் வேலை வாய்ப்பு, பெட் எக்ஸ், ஆன்லைன் டிரேடிங், எஸ்.பி.ஐ., ரிவார்ட்ஸ், சமூக வலைதளங்களில் போட்டோ மார்பிங் செய்து மிரட்டல் உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக, தினசரி பலர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனை, ‘பேப்பர் லெஸ்’ ஸ்டேஷனாக மாற்றும் முயற்சியில், மாநகர போலீசார் இறங்கியுள்ளனர். அதன் முதற்கட்டமாக, சைபர் கிரைம் புகார்களை பதிவு செய்ய தானியங்கி இயந்திரம் (ஸ்மார்ட் கிரைம் போர்டல்) நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், இயந்திரத்தை ரிப்பன் வெட்டி மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். துணை கமிஷனர் சுகாசினி, சைபர் கிரைம் இன்ஸ்., அருண் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த இயந்திரத்தின் மூலம், சைபர் கிரைம் புகார்களை எளிதாக பதிவு செய்து கொள்ள முடியும். பதிவு செய்த புகாரின் நிலை, விசாரிக்கும் அதிகாரி உள்ளிட்ட தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இதில், சைபர் கிரைம் சிறப்பு திட்டங்கள், மோசடி லிங்க், வாகன பதிவு எண் பரிசோதனை, தொலைந்து போன மொபைல் போனை பிளாக் செய்தல், சந்தேகத்திற்குரிய மொபைல் எண்கள், செயலிகள், சிம் கார்டுகள் குறித்த தகவல்கள் உள்ளிட்டவைகளை, பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தின் மூலம், சைபர் கிரைம் புகார்களை எளிதாக பதிவு செய்து கொள்ள முடியும். பதிவு செய்த புகாரின் நிலை, விசாரிக்கும் அதிகாரி உள்ளிட்ட தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும். சைபர் கிரைம் சிறப்பு திட்டங்கள், மோசடி லிங்க், வாகன பதிவு எண் பரிசோதனை, தொலைந்து போன மொபைல் போனை பிளாக் செய்தல், சந்தேகத்திற்குரிய மொபைல் எண்கள், செயலிகள், சிம் கார்டுகள் குறித்த தகவல்களை பொது மக்கள் தெரிந்து கொள்ளலாம்.