இந்து மக்கள் கட்சி பிரமுகர் சிகிச்சை பலனின்றி சாவு

0
174

கோவையில் குடும்பத்துடன் விஷம் குடித்த இந்து மக்கள் கட்சி பிரமுகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குடும்பத்துடன் விஷம் குடித்தார்

கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் பிரசன்னா (வயது 40), ஜோதிடரான இவர் இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் பிரிவு துணைத்தலைவராக இருந்தார். இவர் சென்னையை சேர்ந்த கருப்பையா (45) என்பவரிடம் இடப்பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி ரூ.25 லட்சம் மற்றும் 15 பவுன் நகையை பெற்று மோசடி செய்ததாக தெரிகிறது. இது குறித்த புகாரின்பேரில் செல்வபுரம் போலீசார் பிரசன்னா, அவருடைய மனைவி அஸ்வினி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த நிலையில் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்த பிரசன்னா, கடந்த 3-ந் தேதி தனது தாய் கிருஷ்ணகுமாரி, மனைவி அஸ்வினி மற்றும் மகள் ஆகியோருடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

சிகிச்சை பலனின்றி சாவு

இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று 4 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பிரசன்னாவின் தாயார் கிருஷ்ணகுமாரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பிரசன்னா மற்றும் அவருடைய மனைவி, மகள் ஆகியோருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு பிரசன்னா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து டாக்டர்கள் அஸ்வினி மற்றும் அவருடைய மகள் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.